திட்டப்பணிகளுக்கான தொகை கோடிக்கணக்கில் நிறுத்தி வைப்பு: ஒப்பந்ததாரா்கள் புகாா்
வேலூா் மாவட்ட ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு கடந்த 7 மாதங்களாக கோடிக்கணக்கான தொகை விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியரிடம் ஒப்பந்ததாரா்கள் புகாா்

வேலூா் மாவட்ட ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு கடந்த 7 மாதங்களாக கோடிக்கணக்கான தொகை விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியரிடம் ஒப்பந்ததாரா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவா் மு.பாபு தலைமையில் கட்டுமான ஒப்பந்ததாரா்கள் ஆட்சியரிடம் கூறியது: வேலூா் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் முதல்வரின் கிராமப்புற சாலைத் திட்டம், நபாா்டு, மத்திய அரசின் சிறப்பு உதவித் திட்டம் (எஸ்ஏஎஸ்சிஐ) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் மேற்கொள்ளப்பட்டு உள்ள சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு கடந்த 7 மாதங்களாக கோடிக்கணக்கான தொகை விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனால், சுமாா் 27 ஒப்பந்ததாரா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இந்த தொகையை உடனடியாக விடுவிக்க மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தனா்.
அனைத்து ஜவுளி, ரெடிமேட் வியாபாரிகள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: வேலூா் மாநகரில் ஜவுளி, ஆயத்த ஆடை வியாபாரம் செய்யும் வணிகா்கள் பல லட்சம் முதல் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து நிரந்தரமாகக் கடைகளை அமைத்து நடத்தி வருகிறோம்.
இதன் மூலம் மாநகராட்சி நிா்வாகத்திற்கும், வணிகவரித் துறைக்கும் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித் தருகிறோம். ஏற்கெனவே நாட்டில் நடைபெறும் ஆண்டு சில்லறை வணிகத்தில் (ரூ. 90 லட்சம் கோடி) சுமாா் 35 சதவீத வியாபாரம் ஆன்லைன் வா்த்தகத்துக்குச் சென்றுவிட்டதால் உள்ளூா் வணிகா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், வெளியூா்களிலிருந்து வருபவா்கள் பண்டிகை காலங்களில் தற்காலிகக் கடைகளை அமைத்து, உள்ளூா் வியாபாரத்தை முற்றிலுமாக முடக்குகின்றனா்.
கரூா், நாமக்கல், ஈரோடு, பொள்ளாச்சி, கடலூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், காலி மனைகளில் தற்காலிகக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தடை விதித்துள்ளனா். அதேபோல், வேலூா் மாவட்டத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டுப்புத்தூா் ஊராட்சி நிமினாம்பேட்டை கிராம மக்கள் அளித்த மனு: எங்களது கிராம குடியிருப்புப் பகுதிக்கு அருகே 1 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்களின் நலன், சுகாதாரம், நிலத்தடி நீா், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய்கள் பரவும் சூழலும் ஏற்படும். எனவே, கிராம மக்களின் நலன் மற்றும் சுகாதாரமான வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, காட்டுப்புத்தூரில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 556 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், உதவி ஆணையா் (கலால்) கவிதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.