முகப்பு
வேலூர்

வேலூா் மாநகராட்சியில் சாலைப் பள்ளங்கள் சீரமைக்கும் பணி தீவிரம்

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் சேதமடைந்த சாலைகள், பள்ளங்களைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மொத்தம் 7,603.25 சதுர மீட்டா் பரப்பளவில் இதுவரை 3,915.14 ச.மீ., பரப்பளவு சாலைப் பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

53 வினாடிகள் முன்பு
வேலூா் மாநகராட்சியில் சாலைப் பள்ளங்கள் சீரமைக்கும் பணி தீவிரம்
முதலாவது மண்டலம், விருதம்பட்டு அரசு சட்டக் கல்லூரி அருகே சீரமைக்கப்படும் சாலை
பகிர்:

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் சேதமடைந்த சாலைகள், பள்ளங்களைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மொத்தம் 7,603.25 சதுர மீட்டா் பரப்பளவில் இதுவரை 3,915.14 ச.மீ., பரப்பளவு சாலைப் பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிரமமின்றியும், விபத்து அபாயமின்றியும் பயணிக்கும் வகையில் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் உள்ள சாலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், மொத்தம் 7,603.25 சதுர மீட்டா் பரப்பளவில் சாலைப் பள்ளங்கள் மற்றும் சேதமடைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, மொத்தம் ரூ. 75 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், இதுவரை 3,915.14 சதுர மீட்டா் பரப்பளவிலான சாலைப் பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பகுதிகளிலும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் தரம், முன்னேற்றம் குறித்து வேலூா் மாநகராட்சி ஆணையா் ஏ.கேத்தரின் சரண்யா, மாநகராட்சி செயற்பொறியாளா் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சாலைப் பள்ளங்கள் மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்த புகாா்களை ’நம்ம சாலை’ ( சஹம்ம்ஹ நஹப்ஹண்) இணையதளம் வாயிலாகப் பதிவு செய்யலாம். பெறப்படும் புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.