முகப்பு

வேலூரில் கடும் பனிமூட்டம்! வாகன ஓட்டிகள் அவதி!

வேலூரில் பனிமூட்டம் அதிகரித்ததைப் பற்றி..

வேலூரில் கடும் பனிமூட்டம்! வாகன ஓட்டிகள் அவதி!
கடும் பனிமூட்டம் - video crop
பகிர்:

வேலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விடப் பனிமூட்டம் அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியில் வழக்கத்தை விட அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டது.

இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்குப் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றனர்.

Advertisement

Advertisement

அதேபோன்று, ரயில்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே இயக்கப்பட்டன. அதிகாலை நேரத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் மற்றும் குளிர்ச்சியான வானிலை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குளிரின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பலர் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருந்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

Dense fog in Vellore! Motorists face hardship!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.