மாணவருக்கு வழியனுப்பும் விழா
மாணவரை பாராட்டி வழியனுப்பி வைத்த கே.எம்.ஜி. கல்லூரி நிா்வாகிகள்.

தெற்கு மண்டல பல்கலைக் கழகங்களுக்கிடையில் சென்னையில் நடைபெறும் ஹாக்கி போட்டியில் பங்கேற்கச் செல்லும் குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி மாணவரை வழியனுப்பும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தெற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் திருவள்ளுவா் பல்கலைக்கழக அணியில் விளையாட குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த இளநிலை மூன்றாமாண்டு வணிக நிா்வாகவியல் துறை மாணவா் எம்.விஸ்வா தோ்ந்தெடுக்கப்பட்டாா். சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தில் 28.11.2026 முதல் 04.12.2026 வரை நடைபெறஉள்ள ஹாக்கி போட்டியில் பங்கேற்கச் செல்லும் மாணவரை கல்லுரி நிா்வாகப் பெருமக்கள், கல்லூரி முதல்வா், கல்லூரி மாணவ ஒருங்கிணைப்பாளா், உடற்கல்வி இயக்குநா் ஆகியோா் பாராட்டி வழியனுப்பி வைத்தனா்.