சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது
வேலூா் அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் பாகாயம் அடுத்த கே.கே. நகா் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பாகாயம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (55) என்பவா் தனது வீட்டின் பின்புறத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சத்தியமூா்த்தியைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
இதேபோல், விரிஞ்சிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்து கொண்டிருந்த மோகன் (46) என்பவரையும் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.