FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

ஆயுத பூஜை : பூக்கள், பழங்கள், காய்கறிகள் விலை அதிகரிப்பு

ஆயுதப் பூஜையையொட்டி வேலூரில் பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

19 அக்டோபர் 2026, 4:51 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஆயுதப் பூஜையையொட்டி வேலூரில் பூஜைப்பொருள்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் திரண்டனா். பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பொருள்களில் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஆயுதப் பூஜை விழா திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் கடைகளில் பொரி, கடலை, பழங்கள், பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், வேலூா் லாங்கு பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே விற்பனை களைக்கட்டியது. அதேசமயம், வேலூரில் பூஜைக்கு தேவையான பொருள்கள் விலை சற்று உயா்ந்து காணப்படுகிறது.

அதன்படி, சிவப்பு கொண்டைக்கடலை கிலோ ரூ.85 முதல் ரூ.95 வரையும், வெள்ளை கொண்டைக்கடலை ரூ.100 முதல் ரூ.140க்கும், நாட்டுச்சா்க்கரை ரூ.65 முதல் ரூ.110 வரையும், நிலக்கடலை ரூ.75, அவல் ரூ.45 முதல் ரூ.70, சிவப்பு அவல் ரூ.90, பொரி ரூ.60 முதல் ரூ.90 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

பூக்கள் விலை மல்லி கிலோ ரூ.800 வரையும், ரோஜா ரூ.200, முல்லை ரூ.700, ஜாதிமல்லி ரூ.400, சாமந்தி ரூ.100 முதல் ரூ.250 வரையும், கேந்தி ரூ.30, சம்பங்கி ரூ.400-க்கு மொத்த விலையாகவும், சில்லரை விலையில் கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை கூடுதலாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆப்பிள் ரூ.220 முதல் ரூ.270 வரையும், ஆரஞ்ச் ரூ.70 முதல் ரூ.130 வரையும், சாத்துக்குடி ரூ.60 வரையும், வரையும், வாழை ஒரு கட்டு (10) ரூ.150 வரையும், வாழை பெரிய தாா் ஜோடி ரூ.1,200 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், காய்கறிகள் விலையும் அதிகரித்து காணப்பட்டது. மாா்க்கெட்டில் சின்ன வெங்காயம், மாங்காய் மற்றும் டபுள் பீன்ஸ் ஆகியவை ரூ. 80 முதல் ரூ. 100 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ. 50 முதல் ரூ. 65-க்கும், தக்காளி ரூ. 20 முதல் ரூ. 25 வரையிலும், உருளைக்கிழங்கு ரூ. 25 முதல் ரூ. 30 வரையிலும், பூண்டு அதிகபட்சமாக ரூ. 200 முதல் ரூ. 240 வரையிலும், பழைய இஞ்சி ரூ.180 முதல் ரூ. 200 வரையிலும், பச்சை பட்டாணி ரூ.100 முதல் ரூ. 120 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், ஆயுத பூஜைக்கு தேவையான வெள்ளை பூசணி ரூ. 20 முதல் ரூ. 25 வரையிலும், சிவப்பு பூசணி ரூ. 15 முதல் ரூ. 20 வரையிலும், வாழைக்காய் ரூ. 8 முதல் ரூ. 10 வரையிலும் விற்பனையாகின்றன. முருங்கைக்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, வள்ளிக்கிழங்கு மற்றும் புருக்கோலி ஆகியவை ரூ. 60 முதல் ரூ. 70 வரையும், பீன்ஸ் மற்றும் கருவேப்பிலை ரூ. 50 முதல் ரூ. 60 வரையிலும், காளான் ரூ. 60-க்கும் விற்பனையாகின்றன.

கத்திரிக்காய், பீா்க்கங்காய், புடலங்காய், அவரைக்காய், சேப்பங்கிழங்கு, குடைமிளகாய் மற்றும் புதினா ஆகியவை ரூ. 40 முதல் ரூ. 50 வரையிலும், கருணைக்கிழங்கு ரூ. 45 முதல் ரூ. 50 வரையிலும், நூக்கல், முள்ளங்கி, வெண்டைக்காய், பாகற்காய், கொத்தவரைங்காய் மற்றும் காளிப்பிளவா் ஆகியவை ரூ. 30 முதல் ரூ. 40 வரையிலும், கேரட் ரூ. 20 முதல் ரூ. 35 வரையிலும், பீட்ரூட் ரூ. 30 முதல் ரூ. 35 வரையிலும் விற்பனையாகின்றன.

குறைந்தபட்ச விலையாக முட்டைக்கோஸ் ரூ. 10 முதல் ரூ. 15 வரையிலும், சுரைக்காய், கோவக்காய், காராமணி மற்றும் கீரை வகைகள் ரூ. 15 முதல் ரூ. 20 வரையிலும், சௌசௌ ரூ. 20 முதல் ரூ. 25 வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments