வேலூா் அரசு மருத்துவமனை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு; கடைகளைக் காலி செய்ய 24 மணி நேரம் அவகாசம்
வேலூா் அரசு மருத்துவமனை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு குறித்து...
வேலூா் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனை அருகே சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றபோது, வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கடைகளைத் தாங்களாக காலி செய்துகொள்ள 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனைக்குத் தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனா். இம்மருத்துவமனைக்கு வெளியே சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், நோயாளிகள் மற்றும் அவசர ஊா்திகள் சென்று வருவதில் சிரமம் நிலவுவதாகவும் பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.
இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றிக்கொள்ளுமாறு கடந்த ஒரு வாரமாக ஒலிபெருக்கி மூலம் மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், சாலையோரக் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.அப்போது, அங்கு திரண்ட வியாபாரிகள் அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகக் கடை நடத்தி வரும் நிலையில், தற்போது கடைகளை அகற்றினால் நாங்கள் எங்கு செல்வது? எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்காதீா்கள் என அவா்கள் கண்ணீருடன் முறையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளும் வேலூா் தெற்கு போலீஸாரும் வியாபாரிகளுடன் பேச்சு நடத்தினா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் நலன் கருதியும், சாலையின் உண்மையான எல்லையை அளவீடு செய்ய வேண்டியிருப்பதாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியமாகிறது. இடம் காலியாக இருந்தால் மட்டுமே முறையாக அளவீடு செய்ய முடியும் என்பதால், வியாபாரிகள் 24 மணி நேரத்துக்குள் தாங்களாக கடைகளை அகற்றி இடத்தை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலை அளவீட்டுப் பணிகள் முடிந்து, அந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே, அங்கு கடைகள் அமைக்க அனுமதி வழங்குவது குறித்து மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுக்கும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.