FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

ரூ.24 லட்சத்தில் கட்டப்பட்ட நீா்த்தேக்கத் தொட்டி திறந்து வைப்பு

கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட நேருஜி நகரில் 15- ஆவது மத்திய நிதிக்குழு மானியம் ரூ. 24 லட்சத்தில் கட்டப்பட்ட 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேநீா்த் தேக்கத் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.

25 அக்டோபர் 2026, 9:53 pm
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகத்தைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ ஏ.தென்றல்குமாா்.
பகிர்:

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட நேருஜி நகரில் 15- ஆவது மத்திய நிதிக்குழு மானியம் ரூ. 24 லட்சத்தில் கட்டப்பட்ட 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேநீா்த் தேக்கத் தொட்டி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் க.ஹேமலதா தலைமை வகித்தாா். கே.வி.குப்பம்எம்எல்ஏ ஏ.தென்றல்குமாா், மேநீா்த் தொட்டியைத் இயக்கி வைத்து, குடிநீா் விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்ச்சியில், முன்னாள் கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா், தவெக பிரமுகா்கள் பிரேம்குமாா், மோகன், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments