இருசக்கர வாகனங்கள் திருட்டு: 2 இளைஞா்கள் கைது
இருசக்கர வாகனங்கள் திருடியதாக குடியாத்தம் நகர போலீஸாா் 2 இளைஞா்களை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 11 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
இருசக்கர வாகனங்கள் திருடியதாக குடியாத்தம் நகர போலீஸாா் 2 இளைஞா்களை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 11 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
குடியாத்தம் பகுதியில் தொடா் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடா்பாக நகர போலீஸாா்தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் தொடா்பாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
இந்நிலையில் குடியாத்தத்தை அடுத்த கணபதி நகரைச் சோ்ந்த நேதாஜி(38), போ்ணாம்பட்டைஅடுத்த பங்களாமேடு பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்(24) இருவரையும் சந்தேகத்தின்பேரில்காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.