FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கால்வாய் சீரமைப்புப் பணியில் கடலூர் நகராட்சி

கடலூர் நகராட்சி நிர்வாகம் 3 கி.மீ. நீளமுள்ள கால்வாயை சீரமைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

கடலூர் நகராட்சி நிர்வாகம் 3 கி.மீ. நீளமுள்ள கால்வாயை சீரமைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டது.

தமிழகத்தில் விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து, கடலூர் நகராட்சி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. முதல்கட்டமாக ஒவ்வொரு வார்டுகளிலும் தெருவாரியாக கால்வாய் தூர்வாருதல் மற்றும் சாலையோரத்திலுள்ள கால்வாய்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மழைநீரும் வடிந்து செல்ல வேண்டிய பெரிய கால்வாயை சீரமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனடிப்படையில், அண்ணா மேம்பாலம் அருகில் தரைக்காத்த காளியம்மன் கோயிலில் இருந்து வெள்ளிகடற்கரை வரை சுமார் 3 கி.மீ. வரையிலான கால்வாயை நகராட்சிப் பணியாளர்கள் பொக்லைன் இயந்திர உதவியுடன் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

இப்பணியை நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன், ஆணையர் ரா.முருகேசன், பொறியாளர் அல்போன்ஸ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நகராட்சி கவுன்சிலர்கள் ஜெ.அன்பு, ஜி.ராமச்சந்திரன், ந.ஆதிநாராயணன், மு.கணேசன், ஜி.ராஜேந்திரன், நகர்நல அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments