சாலை பள்ளங்களில் செம்மண் நிரப்பும் பணி
விருத்தாசலத்தில் குண்டும் குழியுமான சாலையில் பொதுநல அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை செம்மண் கிராவல் நிரப்பும் பணி நடைபெற்றது.
விருத்தாசலத்தில் குண்டும் குழியுமான சாலையில் பொதுநல அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை செம்மண் கிராவல் நிரப்பும் பணி நடைபெற்றது.
விருத்தாசலம் வழியாக கடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பள்ளங்கள் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் சீரமைப்புப் பணி நடைபெறவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில், வள்ளலார் அறக்கட்டளைத் தலைவர் இளையராஜா, தனது சொந்த செலவில் டிராக்டரில் செம்மண் கிராவல் ஏற்றி வந்து சாலையில் குண்டும் குழியுமான இடங்களில் நிரப்பினார். அப்போது, போக்குவரத்துப் போலீஸார் அப்பணியை பார்வையிட்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.