வடக்குத்து ஊராட்சியில் விஜயா வங்கி திறப்பு
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விஜயா வங்கியின் நெய்வேலி கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விஜயா வங்கியின் நெய்வேலி கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வங்கியின் சென்னை மண்டல மேலாளர் கே.தேவதாஸன் தலைமை வகித்தார். நெய்வேலி கிளை மேலாளர் ஜி.துரைமுருகன் முன்னிலை வகித்தார். வடக்குத்து ஊராட்சி மன்றத் தலைவர் கோ.ஜெகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விஜயா வங்கியின் 1,721-வது கிளையை திறந்து வைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.