FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரளத்துக்கு ரூ. 5.40 கோடி நிதியுதவி: என்எல்சி இந்தியா நிறுவனம் வழங்கியது

கேரளத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில், ரூ. 5.40 கோடிக்கான காசோலையை அதன் இயக்குநர் ஆர்.விக்ரமன் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம்

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

கேரளத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில், ரூ. 5.40 கோடிக்கான காசோலையை அதன் இயக்குநர் ஆர்.விக்ரமன் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் புதன்கிழமை வழங்கினார்.
 சமீபத்தில் பெய்த பெருமழையால் கேரள மாநிலம் மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்தது. அங்கு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து உதவுமாறு அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகள், அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமுடன் உதவி வருகின்றனர்.
 இந்த நிலையில், என்எல்சி இந்தியா நிறுவன ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன்வந்தனர். அவ்வாறு திரட்டப்பபட்ட நிதி ரூ. 3 கோடியே 39 லட்சத்து 70 ஆயிரத்துடன், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது பங்களிப்பாக ரூ. 2 கோடியைச் சேர்த்து மொத்தம் ரூ. 5 கோடியே 39 லட்சத்து 70 ஆயிரத்தை கேரளத்துக்கு வழங்கியது.
 இதற்கான காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் வழங்கினார்.
 அப்போது, தூத்துக்குடி என்டிபிஎல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷாஜி ஜான், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை தலைமைப் பொது மேலாளர் என்.சதீஷ்பாபு, நிதித் துறைத் தலைமைப் பொது மேலாளர் வி.என்.பாபு உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments