FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை: புதிய ஆட்சியர்

வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற வெ.அன்புச்செல்வன் கூறினா

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற வெ.அன்புச்செல்வன் கூறினார்.
 கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த வே.ப.தண்டபாணி சென்னையில் உள்ள அச்சு, எழுதுபொருள் துறை இயக்குநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த வெ.அன்புச்செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
 இதையடுத்து, அவர் புதன்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, ஊரக வளர்ச்சித் திட்ட முகமைத் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கடலூர் மாவட்டம் இயற்கைச் சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. அதற்காக தொலைநோக்கு பார்வையுடன், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 இந்தப் பணிகளைப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக போர்க்கால அடிப்படையில் செய்து முடிப்போம் என்றார் அவர்.
 செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கடலூர் சார் ஆட்சியர் கே.எம்.சரயு, செய்தி -மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
 கடலூர் மாவட்டத்தின் 19-ஆவது ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள வெ.அன்புச்செல்வன், கடந்த1986- ஆம் ஆண்டு தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார். பின்னர், விழுப்புரத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெற்று, மதுராந்தகம் சார் ஆட்சியராகவும், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராகவும் (வருவாய் }நிதி), சென்னை மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்துள்ளார்.
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments