ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு
பண்ருட்டி அருகே ஆசிரியையிடம் 5 பவுன் தங்க நகையைப் பறித்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே ஆசிரியையிடம் 5 பவுன் தங்க நகையைப் பறித்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி ஒன்றியம், ஆத்திரிக்குப்பம், தெற்கு தெருவில் வசிப்பவர் கிருஷ்ணலீலா. தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி தமிழ்மொழி (30), உளுந்தூர்பேட்டை வட்டம், சேந்தநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை மொபெட்டில் பள்ளிக்கு புறப்பட்டார்.
விசூர் சாலையில் முந்திரிக் காடுகள் அடர்ந்த பகுதி வழியாகச் சென்ற போது, தலைக் கவசம் அணிந்த மர்ம நபர், தமிழ்மொழி சென்ற மொபெட்டை எட்டி உதைத்தார். இதில் தமிழ்மொழி கீழே விழுந்து காயமடைந்தார். அப்போது மர்ம நபர் ஆசிரியையின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்.
சம்பவத்தில் காயமடைந்த தமிழ்மொழி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.