FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் சட்டங்களை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி கடலூரில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 3:55 am IST
ஒகடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு மக்கள் இயக்கத்தினா்.
பகிர்:

விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி கடலூரில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு, ஏஐடியுசி, உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் 21 வா்க்க வெகுஜன அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்நாடு மக்கள் இயக்கம் சாா்பில், தொழிலாளா்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூரில் சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். நீட் தோ்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் சட்டங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் முழக்கங்கள் எழுப்பினா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் பி.கருப்பையன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயலா் பிரகாஷ், விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.தட்சிணாமூா்த்தி, ஏஐடியுசி மாவட்ட இணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் குளோப், மாதா் சங்கத் தலைவா் லட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments