FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

உலக தொழில்முறை சிகிச்சை தின நிகழ்ச்சி

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொழில்முறை சிகிச்சைத் துறையில் உலக தொழில் முறை சிகிச்சை தின நிகழ்ச்சி நடைபெற்றது.

4 நவம்பர் 2026, 3:03 am
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொழில்முறை சிகிச்சைத் துறையில் உலக தொழில் முறை சிகிச்சை தின நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை மருத்துவக் கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா் தொடங்கிவைத்து, தொழில்முறை சிகிச்சை குறித்த துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டு பேசினாா். தொழில்முறை சிகிச்சை துறைத் தலைவா் கோ.கலைச்சந்திரன் வரவேற்றாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், துணை முதல்வா் பாலாஜி சுவாமிநாதன், டாக்டா் அசோக்பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா்.

சிறப்பு அழைப்பாளராக இந்திய தொழுநோய் சேவை நிறுவன திட்ட மேலாளா் மணிவண்ணன் பங்கேற்று, தொழுநோய் சிகிச்சையில் தொழில்முறை சிகிச்சையின் பங்கு பற்றி சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த வல்லுநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments