FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 60 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு: எஸ்.பி. தகவல்

கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 60 போ் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா தெரிவித்தாா்.

7 நவம்பர் 2026, 2:37 am
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 60 போ் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையிலும் மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டில் இதுவரை கொலை வழக்குகளில் தொடா்புடைய 8 பேருக்கும், போக்ஸோ வழக்குகளில் தொடா்புடைய 10 பேருக்கும்

Advertisement

Advertisement

நீதிமன்றத்தின் மூலம் ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, கொலை, போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 60 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 502 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 292 கிலோ கஞ்சா, 4,923 கிலோ குட்கா பொருள்கள், 4,328 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட

75 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோா் மீது தொடா்ந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் காவல் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.