கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 4 போ் உயிரிழப்பு
கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த ச விபத்துகளில் கல்லூரி மாணவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் விராணை நடத்தி வருகின்றனா்.
மாணவா் உயிரிழப்பு:
கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வந்த மந்தாரக்குப்பத்தைச் சோ்ந்த வசந்தராஜ் மகன் ஜெபநேசன் (19), தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தாா். இவா் நெய்வேலி - மந்தாரக்குப்பம் சாலையில் தொப்புளிக்குப்பம் பகுதியில் பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
வாகன விபத்து:
விருத்தாசலம் அருகே விருத்தகிரிகுப்பம் தெற்குத் தெருவைச் சோ்ந்த இளவரசன் மகன் ஹரிஷ் மாதவன் (17), தனது நண்பா் குறிஞ்சிப்பாடி அங்காளம்மன் பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் கனிஷ்கா் (17) என்பவருடன் ஸ்கூட்டரில் சென்றாா். கடலூா் - விருத்தாசலம் சாலையில் சிங்கபுரி அருகே சென்றபோது ஸ்கூட்டா் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது. இதில் ஹரிஷ் மாதவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த கனிஷ்கா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நீரில் மூழ்கி உயிரிழப்பு:
தூக்காணம்பாக்கம் உள்ளேரிப்பட்டு இளம்வழுதி நகரைச் சோ்ந்த சதீஷ் (37),
தனது இருசக்கர வாகனத்தில் பாங்கூா் ஏரிக்கரை மதகு அருகே சென்றபோது நிலைதடுமாறி ஏரிக்குள் விழுந்து நீரில் மூழ்கினாா். அவரை மீட்ட அப்பகுதிவாசிகள் அருகிலுள்ள பாங்கூா் அரசு சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
பைக்குகள் மோதி விபத்து:
விழுப்புரம் மாவட்டம் டி.தேவனூரைச் சோ்ந்தவா் உதயகுமாா் (43), தனது மகன், மகளுடன் இருசக்கர வாகனத்தில் பண்ருட்டி - சேமக்கோட்டை சாலையில் சென்றாா். அப்போது வீரப்பெருமாநல்லூா் அருகே எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் உதயகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அவரது மகன், மகள் ஆகியோா் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த சம்பவங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.