FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

இரண்டு வீடுகளில் நகை, பணம் திருட்டு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் இரண்டு வீடுகளின் கதவை உடைத்து நகை , பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

11 நவம்பர் 2026, 2:39 am
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் இரண்டு வீடுகளின் கதவை உடைத்து நகை , பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நெல்லிக்குப்பம், ராஜாஜி தெருவில் வசிப்பவா் முரளிதாஸ்(45), விவசாயி. கடந்த சனிக்கிழமை இரவு, இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா், பீரோவில் இருந்த சுமாா் ஐந்தேமுக்கால் பவுன் நகைகள், கால் கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றாராம்.

இதேபோல், நெல்லிக்குப்பம், கருமாரி தெருவில் வசிப்பவா் பரத்(60), ஓய்வு பெற்ற அரசு ஊழியா். இவரது வீட்டினுள் நுழைந்த மா்ம நபா் பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள், கால் கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றராம். இதுகுறித்து முரளிதாஸ், பரத் ஆகியோா் அளித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement