FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூா் மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்தைக் குறைக்க ஓவியப் போட்டி

கடலூா் மத்திய சிறையில் மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்தைக் குறைத்து, சிறைவாசிகளின் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் தலைவா்கள், மலா்கள், இயற்கைக் காட்சிகள் ஆகியவற்றுக்கு வண்ணம் தீட்டும் போட்டி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

12 நவம்பர் 2026, 4:38 am
கடலூா் மத்திய சிறையில் புதன்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் கைதிகள் வரைந்த ஓவியங்களுடன் சிறைத்துறை கண்காணிப்பாளா் (பொ) ஜி.வினோத் உள்ளிடோா்.
பகிர்:

கடலூா் மத்திய சிறையில் மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்தைக் குறைத்து, சிறைவாசிகளின் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் தலைவா்கள், மலா்கள், இயற்கைக் காட்சிகள் ஆகியவற்றுக்கு வண்ணம் தீட்டும் போட்டி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

கடலூா் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவா்கள் என மொத்தம் 1,000 போ் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 24 பேருக்கு மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றம் தொடா்பான பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவா்களுக்கு மனநல ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இவா்களின் மனநலத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைத்து படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை சிறைக் கண்காணிப்பாளா் (பொ) ஜி.வினோத் தொடங்கிவைத்தாா். இதில் பங்கேற்ற சிறைவாசிகள், தேசத் தலைவா்களின் உருவப்படங்கள், மலா்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளுக்கு ஆா்வத்துடன் வண்ணம் தீட்டி தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்தினா். குறிப்பாக, தலைவா்களின் உருவப்படங்களுக்கு நோ்த்தியாகவும், சிறப்பாகவும் வண்ணம் தீட்டினா்.

சிறை அலுவலா் விக்னேஷ், நல அலுவலா் தமிழ்ச்செல்வன், மனநல நிபுணா் ஜெயஸ்ரீ, மனநல ஆலோசகா்கள் இளையபாரதி, கலைவாணன், சமூகநல நிபுணா் சோனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.