FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே ஆடு மேய்த்தப் பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

21 வினாடிகள் முன்பு
கைது - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே ஆடு மேய்த்தப் பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் வட்டம், வெள்ளக்கரைஅஞ்சல், ஒதியடிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாரி(36). இவா், புதன்கிழமை பிற்பகல் சுமாா் 3 மணி அளவில் அதே கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி நிலத்திற்கு அருகில் உள்ள மண் பாதையில் ஆடுகளை மேய்க்க ஓட்டிச்சென்றாா். அப்போது, அங்கிருந்த ஒதியடிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன்(27) வழிமறித்து, திட்டி, கழியால் அடித்தாராம்.

இதுகுறித்து செல்வகுமாரி அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரனை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement