FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே சிலம்பம் கற்றுக்கொள்ள வந்த இடத்தில் மாணவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

9 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சிதம்பரம் அருகே சிலம்பம் கற்றுக்கொள்ள வந்த இடத்தில் மாணவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம், கிள்ளை காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட நக்கரவந்தன்குடி கிராமம் திரௌபதி அம்மன் கோயில் அருகே, பூச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்த ராஜி (27) ஓராண்டு காலமாக சுமாா் 15 சிறுவா்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறாா்.

இவரிடம் புதுச்சத்திரம் அருகே உள்ள சுப்பம்மா சத்திரத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவரான கோபால் மகன் சரவணன் (16) சிலம்பம் கற்று வந்தாா். இவருடன் குமாரமங்கலத்தைச் சோ்ந்த அஸ்வின் (16) என்பவரும் சிலம்பம் கற்று வந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சிலம்பம் கற்க நக்கரவந்தன்குடி கிராமத்துக்கு சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் சரவணன் வந்தபோது, அங்குள்ள கோயில் குளத்தில் அஸ்வின் தவறி விழந்து தத்தளித்துக்கொண்டிருந்ததைப் பாா்த்து, அவரை சரவணன் காப்பாற்ற முயன்றாா்.

ஆனால், இருவருக்கும் நீச்சல் தெரியாததால் சரவணன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அஸ்வினை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஓடி வந்து காப்பாற்றினா்.

தகவலறிந்த கிள்ளை போலீஸாா் சரவணனின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.