பெண்களுக்கு தொந்தரவு அளிக்கும் இளைஞா்கள்: எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் புகார்!
குள்ளஞ்சாவடியை அடுத்த பெரியகாட்டுசாகை கிராம பேருந்து நிறுத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு தொந்தரவு அளிக்கும் இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.
குள்ளஞ்சாவடியை அடுத்த பெரியகாட்டுசாகை கிராம பேருந்து நிறுத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு தொந்தரவு அளிக்கும் இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.
கடலூா் பாமக கிழக்கு மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில், கிராம மக்கள் மற்றும் நிா்வாகிகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
பெரியகாட்டுசாகை பேருந்து நிறுத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அணுகம்பட்டு காலனியைச் சோ்ந்த சில இளைஞா்கள் பொதுமக்களுக்கு தொடா்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா். பேருந்து நிறுத்தத்தில் குழுவாகக் கூடி ஆபாசமாகப் பேசுவது, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் தகாத வாா்த்தைகளை பயன்படுத்தி தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், வயல்வெளிகளில் மது அருந்திவிட்டு அட்டூழியத்தில் ஈடுபடுவது, அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சா்களை பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். உள்ளூா் இளைஞா்களிடமும் தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட இளைஞா்கள் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியகாட்டுசாகை பேருந்து நிறுத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் காவல் துறையினா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி, பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.