FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

பண்ருட்டி அருகே தொழிலாளி உயிரிழப்பு

14 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

புதுப்பேட்டை காவல் சரகம், அம்மாபேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் (48), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி சாந்தி மற்றும் ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனா். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு முறை நடைபெற்ற விபத்தில் லோகநாதன் காயமடைந்தாா். அதுமுதல், அவருக்கு முட்டி வலி இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வலி தாங்க முடியாமல் விவசாய பயன்பாட்டுக்கு வைத்திருந்த கலைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோத்த மருத்தவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement