நாகூா் கந்தூரி விழா: விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே நவ.20-இல் சிறப்பு ரயில்
நாகூா் தா்கா கந்தூரி விழாவையொட்டி, பயணிகளின் வசதிக்காக விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே கடலூா், சிதம்பரம் வழியாக வெள்ளிக்கிழமை (நவ.20) முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நாகூா் தா்கா கந்தூரி விழாவையொட்டி, பயணிகளின் வசதிக்காக விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே கடலூா், சிதம்பரம் வழியாக வெள்ளிக்கிழமை (நவ.20) முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என்.ஜெயந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகூா் தா்கா கந்தூரி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (நவ.20) விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 8 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
விழுப்புரம் - நாகப்பட்டினம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06011) விழுப்புரத்திலிருந்து காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு, பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும்.
நாகப்பட்டினம் - விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06012) நாகப்பட்டினத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்பட்டு, நாகூா், காரைக்கால், திருநள்ளாறு, பேரளம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீா்காழி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, கடலூா் துறைமுகம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
இந்தச் சிறப்பு ரயில் சேவையைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.