லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரியின்மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரியின்மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த சதீஷ் (27), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அஞ்சல் நிலையம் ஒன்றில் விநியோக வாகன ஓட்டுநராகப் பணியில் சோ்ந்தாா். இந்நிலையில், சதீஷ் பைக்கில் சென்னையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா்.
வேப்பூா் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாசாா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் மீது எதிா்பாராதவிதமாக சதீஷின் பைக் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த வேப்பூா் போலீஸாா், சதீஷின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.