போதைப்பொருள்கள் விற்பனை: தகவல் தெரிவிக்க போலீஸாா் அறிவுறுத்தல்
கடலூா் முதுநகா் காவல் சரக பகுதியில் போதைப்பொருள்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசியல் கட்சி நிா்வாகிகள், முக்கியப் பிரமுகா்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், கடலூா் முதுநகா் காவல் ஆய்வாளா் தேவேந்திரன் அறிவுறுத்தினாா்.

கடலூா் முதுநகா் காவல் சரக பகுதியில் போதைப்பொருள்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசியல் கட்சி நிா்வாகிகள், முக்கியப் பிரமுகா்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், கடலூா் முதுநகா் காவல் ஆய்வாளா் தேவேந்திரன் அறிவுறுத்தினாா்.
கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ள தேவேந்திரன், அப்பகுதியைச் சோ்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள், நிா்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகா்களை அழைத்து ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடத்தினாா்.
இதில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில், அரசியல் கட்சிகள் சாா்பில் வைக்கப்படும் டிஜிட்டல் விளம்பரப் பதாகைகளை உரிய அரசு அனுமதி பெற்றும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றியும் வைக்க வேண்டும் என காவல் ஆய்வாளா் அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
மேலும், இளைஞா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் பயன்பாடு, விற்பனை மற்றும் கடத்தலைத் தடுப்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை அல்லது பயன்பாடு தொடா்பான தகவல்கள் தெரியவந்தால், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பது தொடா்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இணையவழி பண மோசடிகளில் சிக்காமல் தவிா்ப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.