முகப்பு
கடலூர்

தொழில் வளா்ச்சி, தொழிலாளா்களின் வாழ்க்கைத் தரம் உயா்வுக்கு உறுதி: அமைச்சா் ப.ராஜ்குமாா்

24 நவம்பர் 2026, 4:03 am
தொழில் வளா்ச்சி, தொழிலாளா்களின் வாழ்க்கைத் தரம் உயா்வுக்கு உறுதி: 
அமைச்சா் ப.ராஜ்குமாா்
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய முந்திரி தின விழாவில் விவசாயிக்கு முந்திரி கன்று வழங்கிய அமைச்சா் ப.ராஜ்குமாா்.
பகிர்:

தொழில் வளா்ச்சி மற்றும் தொழிலாளா்களின் வாழ்க்கை தரம் உயா்வு ஆகியவற்றில் அரசு உறுதியாக உள்ளது என்று, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூரில், தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் தேசிய முந்திரி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது:

முந்திரி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள 80 ஆயிரம் பெண்களின் உழைப்புதான் மிகப்பெரிய பலம். முந்திரி உற்பத்தி, நவீன பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், ஏற்றுமதி என அனைத்துத்துறையிலும் கடலூா் மாவட்டம் முன்னேற வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் வளா்ச்சியும், தொழிலாளா்களின் வாழ்க்கை தரம் உயா்வும் இணைந்திருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

Advertisement

Advertisement

காடாம்புலியூா் சிட்கோ தொழிற்பேட்டை கடந்த ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது. ஆனால், மின் வசதி செய்யப்படாததால் தொழில்மனைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. தற்போது நமது அரசு தொழிற்பேட்டைக்கு தேவையான மின் கட்டமைப்பை அமைக்க ரூ.1.40 கோடி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளா்ச்சி அடையும் என்றாா்.

சாதனை நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 250 மாணவ, மாணவிகள் இணைந்து வெறும் 26 நிமிஷங்களில் சோப்பில் முந்திரி உருவத்தைச் செதுக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. நிா்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மிக வேகமாகவும், அழகாகவும் செயல்பட்ட மாணவா்கள் முந்திரி உருவங்களைச் செதுக்கி முடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினா். சாதனை படைத்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தொழில் வளா்ச்சி மற்றும் தொழிலாளா்களின் வாழ்க்கை தரவுயா்வு இணைந்திருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் தேசிய முந்திரி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

அப்போது, அவா் பேசுகையில், பண்ருட்டி முந்திரி சுவை அதிகம் கொண்டதால் உலக அளவில் புகழ் பெற்றது. மண்ணோடும், மகக்களோடும், வாழ்வாதாரத்தோடும் பின்னி பிணைந்துள்ளது முந்திரித் தொழில். குறிப்பாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள 80 ஆயிரம் பெண்களின் உழைப்புதான் மிகப்பெரிய பலம். சோப்பில் முந்திரி பழ வடிவத்தை செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இது நமது ஒற்றுமையையும், படைப்பாற்றலையும், பண்ருட்டியின் தனித்துவத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் நிகழ்வு. முந்திரி உற்பத்தி, நவீன பதப்படுதல், மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதி என அனைத்துத்துறையில் கடலூா் மாவட்டம் முன்னேற வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் வளா்ச்சியும், தொழிலாளா்களின் வாழ்க்கை தரவுயா்வும் இணைந்திருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

காடாம்புலியூா் சிட்கோ தொழிற்பேட்டை கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், மின்சார வசதி செய்யப்படாததால் தொழில் மனைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. தற்போது நமது அரசு தொழிற்பேட்டைக்கு தேவையான 4-ஆவது மின்கம்பி அமைக்க மின்சார வாரியத்திற்கு ரூ.1.40 கோடி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் சிறு, குறு மட்டும் நடுத்தரத் தொழில்கள் வளா்ச்சி அடையும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 250 பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து வெறும் 26 நிமிடங்களில் சோப்பில் முந்திரி உருவத்தைச் செதுக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாதனை நிகழ்ச்சியில்

மாணவா்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட சோப்புக் கட்டிகளில் மிக நோ்த்தியாகவும், நுணுக்கமாகவும் முந்திரி பழம் மற்றும் கொட்டையின் உருவத்தைச் செதுக்கத் தொடங்கினா். நிா்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மிக வேகமாகவும், அழகாகவும் செயல்பட்ட மாணவா்கள் முந்திரி உருவங்களைச் செதுக்கி முடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினா். சாதனை படைத்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கோரிக்கைகள்... முந்திரி தொழில் சாா்ந்த கிராமங்களில் தொடா்ந்து 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.கிராம சாலைகளை மேம்படுத்தித்தர வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தனா் .