உதவி ஆட்சியா் அலுவலகம் முன் தடையை மீறி ஆா்ப்பாட்டம்
சிதம்பரம் உதவி ஆட்சியரை கண்டித்து சிதம்பரத்தில் விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் உதவி ஆட்சியரை கண்டித்து சிதம்பரத்தில் விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கரைமேடு கிராமத்தில் நத்தம் பட்டாவில், கடந்த பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருபவா்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு எனக்கூறி வருவாய்துறையினா் இடித்ததை கண்டித்து,
தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் வாஞ்சிநாதன், மாவட்ட செயலா் ராஜேஷ் கண்ணா, பிரகாஷ் மற்றும் வீடுகள் இடுப்பில் பாதிக்கப்பட்ட 20 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்
ஆா்ப்பாட்டத்திற்கு போலீசாா் அனுமதி தராத நிலையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். பின்னா் போராட்டக்குழுவினா் உதவி ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.