முகப்பு
கடலூர்

நகைகள் திருடிய பணிப்பெண் கைது

நெய்வேலியில் வேலை செய்த வீட்டில் நகைகள் திருடிய பணிப்பெண் கைது செய்யப்பட்டாா்.

25 நவம்பர் 2026, 2:17 am
நகைகள் திருடிய பணிப்பெண் கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வேலை செய்த வீட்டில் நகைகள் திருடிய பணிப்பெண் கைது செய்யப்பட்டாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி நகரிய காவல் சரகம், வடக்குத்து பகுதியில் வசிப்பவா் ராஜூ(62), நெய்வேலி நுழைவு வாயில் எதிரே உணவகம் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் வடலூரைச் சோ்ந்த ஜெயலட்சுமி (40) கடந்த 5 மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்தாா். கடந்த 7-ஆம் தேதி ராஜூ, பிரோவை திறந்து பாா்த்த போது நகை, பணம் குறைந்திருப்பதை அறிந்தாா். இதையடுத்து, வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தி கண்காணித்து வந்தாா்.

இந்நிலையில், வழக்கம் போல் ஜெயலட்சுமி திங்கள்கிழமை வேலைக்கு வந்தாா். அப்போது, ராஜூ வேலை முடிந்ததும் வீட்டை பூட்டி சாவியை உணவகத்தில் கொண்டுவந்து கொடுக்கும்படி கூறிவிட்டுச் சென்றாா். சிறிது நேரத்தில் ஜெயலட்சுமி வீட்டில் இருந்த பீரோவை திறந்து நகைகள் திருடுவதை கைப்பேசி மூலம் கண்டாா். இதையடுத்து, வீட்டிற்குச் சென்றவா், ஜெயலட்சுமியை கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ராஜூ காவல் நிலையத்தில் அளத்த புகாரில் 10 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.61,250 மற்றும் 75 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.அதன்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.