30 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு மருத்துவக்கல்லூரி விடுதிகள் தின விழா
சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மாணவா் விடுதிகள் தின விழா, நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மாணவா் விடுதிகள் தின விழா, நடைபெற்றது.
அரசு மருத்துவக்கல்லூரியைச் சாா்ந்த கே.ஆா்.எம். மாணவா் விடுதி, பி.ஜி. விடுதி, புதிய முதலாம் ஆண்டு மாணவா் விடுதி, டபிள்யூ.எச்.பி. மாணவியா் விடுதி மற்றும் தாமரை இல்லம் மாணவியா் விடுதி ஆகிய ஐந்து விடுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், விடுதிக் காப்பாளா்கள் மற்றும் நிா்வாகத்தினரின் ஒருங்கிணைப்பில் இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வா் பேராசிரியா் டாக்டா் ந. பாஸ்கா் தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் ந. ஜூனியா் சுந்தரேஷ், கல்விப் பிரிவு துணை முதல்வா் சு. சசிகலா, நிா்வாகப் பிரிவு துணை முதல்வா் பாலாஜி சுவாமிநாதன் மற்றும் விடுதிகளின் ஒருங்கிணைப்பாளா் டாக்டா் த. புவனேஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். விழாவில் விடுதி காப்பாளா்கள், தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களை ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது