முகப்பு
கடலூர்

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள், வாகனங்கள் எரிந்து சேதம்

29 நவம்பர் 2026, 3:01 am
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள், வாகனங்கள் எரிந்து சேதம்
சிதம்பரம் நகராட்சி இரண்டாவது தளத்தில் எரிந்து சேதமுற்ற ஆவணங்கள் மற்றும் வாகனங்கள்
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள், மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தின் இரண்டாவது

தளத்தில் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த தீவிபத்தில் நகராட்சி அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், மேஜைகள், நாற்காலிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 13 மூன்று சக்கர சைக்கிள்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.