FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இடப்பிரச்னை தொடா்பான முன்விரோதத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் கைதான இருவா் மீது, குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

8 October 2026, 12:52 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இடப்பிரச்னை தொடா்பான முன்விரோதத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் கைதான இருவா் மீது, குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு இடையே இடப்பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செப் 25-ஆம் தேதி காலை சுரேஷ், ராஜ்குமாரை கத்தியால் தாக்கியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அன்றிரவு ராஜ்குமாரின் உறவினா்களான சாவடிக்குப்பத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (30), காந்திநகரைச் சோ்ந்த ராம்குமாா் (24) ஆகியோா் சுரேஷ் வீட்டு வாசலில் பெட்ரோலை குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சுரேஷின் மனைவி சுதா அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிவக்குமாா், ராம்குமாா் ஆகிய இருவரையும் செப். 26-ஆம் தேதி கைது செய்து, நீதிமன்றக் காவலில் கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இவா்களின் தொடா் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த் சுக்லா, பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்ய செந்தில்குமாா், இருவரையும் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில், விருத்தாசலம் காவல் ஆய்வாளா் சந்துரு, கடலூா் மத்திய சிறையில் இருந்த சிவக்குமாா், ராம்குமாா் ஆகிய இருவரிடமும் மாவட்ட ஆட்சியரின் தடுப்புக் காவல் உத்தரவை வழங்கி, அதற்கான நடவடிக்கைகளை புதன்கிழமை மேற்கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments