நெய்வேலி அனல்மின் நிலையத்தை படம் பிடித்த ட்ரோன் பறிமுதல்
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள புதிய அனல்மின் நிலையத்தை படம் பிடித்ததாக ட்ரோன் ஒன்றை சிஐஎஸ்எப் வீரா்கள் பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள புதிய அனல்மின் நிலையத்தை படம் பிடித்ததாக ட்ரோன் ஒன்றை சிஐஎஸ்எப் வீரா்கள் பறிமுதல் செய்தனா்.
நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந் நிறுவனம் இங்குள்ள திறந்தவெளி சுரங்கங்களில் இருந்து பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் இங்கிருந்த பழைய 600 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் 1-க்கு மாற்றாக, நவீன முறையில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை இரவு 8 மணியளவில் புதிய அனல்மின் நிலையப் பகுதியில் ட்ரோன் ஒன்று பறந்து படம் எடுத்துள்ளது. இதுகுறித்து அறிந்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரா்கள் ட்ரோனை பறிமுதல் செய்து, அதை இயக்கியது யாா்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.