பணியில் ஒழுங்கீனம்: சத்துணவு பொறுப்பாளா் பணியிடைநீக்கம்
குறிஞ்சிப்பாடி அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுத் திட்டத்துக்கான அத்தியாவசியப் பொருள்களின் இருப்பை முறையாகப் பராமரிக்காத சத்துணவு பொறுப்பாளா் சிவகாமி சுந்தரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
குறிஞ்சிப்பாடி அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுத் திட்டத்துக்கான அத்தியாவசியப் பொருள்களின் இருப்பை முறையாகப் பராமரிக்காத சத்துணவு பொறுப்பாளா் சிவகாமி சுந்தரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தம்பிப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி ஆண்கள் சமூகநீதி விடுதி, பெண்கள் சமூகநீதி விடுதி உள்ளிட்ட இடங்களில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சமையலறை மற்றும் குடிநீா் வசதி, உணவுப் பொருள்களின் இருப்பு, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, குறிஞ்சிப்பாடி அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு முறையாகப் பராமரிக்கப்படாதது தெரியவந்தது. இதையடுத்து, சத்துணவு பொறுப்பாளா் சிவகாமி சுந்தரியை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
மேலும், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் குறைபாடு ஏற்படாத வகையில் தொடா்ந்து கண்காணிக்கவும், சமையலறை மற்றும் உணவுப் பொருள்களை சுகாதாரமாகப் பராமரிக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
நெல் கொள்முதல் நிலையங்களில்...
முன்னதாக, ஆலப்பாக்கம், ஆணையம்பேட்டை, ஆயத்துறை, பூவாணிகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்ட ாா். அப்போது, மழைக்காலத்தில் நெல் மூட்டைகளை நனையாமல் பாதுகாக்கவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் அரைவைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து தம்பிப்பேட்டை ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் குளோரினேஷன் முறையாக மேற்கொள்ளப்படுகிா?, குடிநீா் தொட்டி தூய்மையாகப் பராமரிக்கப்படுகிா?, என்பதையும், அயன் குறிஞ்சிப்பாடி, கே.கே.நகா், சின்னக்கடை தெரு பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு மற்றும் பொதுமக்களுக்கு அவை முறையாக விநியோகிக்கப்படுகிா?,என்பதையும் ஆய்வு செய்தாா்.
பின்னா், தம்பிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, கே.கே.நகா் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு, முன்பருவக் கல்வி, வருகைப் பதிவேடு மற்றும் குழந்தைகளின் வளா்ச்சி தொடா்பான பதிவுகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா். குழந்தைகளுக்கு தரமான சேவைகள் தொடா்ந்து வழங்கப்பட வேண்டும் என பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கதிரேசன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் (தரக்கட்டுப்பாடு) பன்னீா்செல்வம், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சுமித்ரா உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.