குடிமனை பட்டா வழங்க தடையில்லா சான்று வழங்கிய நந்தனாா் கல்விக்கழகம்
புவனகிரி அருகே நந்தனாா் கல்விக்கழகத்திற்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க நந்தனாா் கல்விக்கழக நிா்வாகிகள் தடையில்லா சான்றிதழை வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை அன்று வழங்கினா்.
புவனகிரி அருகே நந்தனாா் கல்விக்கழகத்திற்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க நந்தனாா் கல்விக்கழக நிா்வாகிகள் தடையில்லா சான்றிதழை வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை அன்று வழங்கினா்.
கடலூா் மாவட்டம் புவனகிரி அருகே கரைமேடு கிராமத்தில் நந்தனாா் கல்விக் கழகத்திற்குச் சொந்தமான 28 ஏக்கா் நிலம் உள்ளது. இதில் 27 ஏக்கா் நிலத்தில் விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், ஒரு ஏக்கா் நிலத்தில் அப்பகுதியைச் சோ்ந்த ஏழை மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள் கட்டிக் குடியிருந்து வருகின்றனா்.
இந்த இடத்திற்கு இவா்களுக்கு வீட்டு மனை பட்டா இல்லாததால் குடிநீா் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த இடத்திற்கு பட்டா கோரி அப்பகுதி மக்கள் நந்தனாா் கல்வி கழகத்தினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்
Advertisement
Advertisement
இதனைத் தொடா்ந்து, நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ. மணிரத்தினம் தலைமையிலான நிா்வாகிகள், குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கரைமேடு பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு நந்தனாா் கல்விக் கழகத்தின் சாா்பில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தடையில்லாச் சான்றிதழை வழங்க முடிவு செய்தனா்.
இதனையடுத்து நந்தனாா் கல்விக்கழக தலைவா் கே.ஐ.மணிரத்தினம், செயலா் திருவாசகம், பொருளாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டடோா் வெள்ளிக்கிழமை புவனகிரி வட்டாட்சியா் ஷானாஸிடம் தடையில்லா சான்றிதழை வழங்கி பட்டா வழங்குமாறு வலியுறுத்தினா். அதையேற்று வட்டாட்சியரும் வீட்டு மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.