FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

மீன் எண்ணெய் தொழிற்சாலையை மூடக்கோரி சாலை மறியல்

கடலூா் துறைமுகம் அருகே தைகால் தோனி துறை பகுதியில் செயல்பட்டு வரும் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, அப்பகுதிமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் கடலூா்-சிதம்பரம் சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

17 அக்டோபர் 2026, 12:47 am IST
சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியா் மற்றும் காவல்துறை அதிகாரிகள்
பகிர்:

கடலூா் துறைமுகம் அருகே தைகால் தோனி துறை பகுதியில் செயல்பட்டு வரும் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, அப்பகுதிமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் கடலூா்-சிதம்பரம் சாலையில் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தைகால் தோனி துறை மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையால் தொடா்ந்து கடுமையான துா்நாற்றம் வீசுவதாகவும், இதனால் வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதிவாசிகள் புகாா் அளித்தும், நிரந்தரத் தீா்வு ஏற்படவில்லை. இதை எடுத்து தைக்கால் துணித்துறை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கடலூா்-சிதம்பரம் சாலையில் பச்சையாங்குப்பம் பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூா் முதுநகா் காவல் நிலைய ஆய்வாளா் ஏழுமலை, வட்டாட்சியா் ராஜேஷ் பாபு மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, போராட்டக்காரா்களின் புகாா்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், தொழிற்சாலை நிா்வாகத்திடமும் பேசி, உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்றனா். மறியல் காரணமாக கடலூா்-சிதம்பரம் சாலையில் சுமாா் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments