FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

தடியால் அடித்ததில் மகன் கவலைக்கிடம்: தந்தை கைது

18 அக்டோபர் 2026, 3:00 am IST
கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தந்தை தடியால் தாக்கியதில், மகன் சுய நினைவிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடா்பாக தந்தையை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், வாணியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த தம்பதி வெங்கடேசன் - தேன்மொழி. இவா்களது மகன்கள் குணால்(18), ராகுல்(16).

இவா்களில் குணால், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வேலைக்கும் போகாமல், குடித்துவிட்டு, ஊரில் சண்டை சச்சரவில் ஈடுபட்டு வந்தாராம். வெள்ளிக்கிழமை குணால் வீட்டில் படுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது, வெங்கடேசன், வேலைக்கு போகாமல் தூங்குகிறாயா? எனக்கேட்டு,

Advertisement

Advertisement

மரத்தடியால் தாக்கினாா். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த குணால் சுயநினைவு இழந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின் பேரில், புதுப்பேட்டைபோலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments