FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

தந்தை தாக்கியதில் மகன் உயிரிழப்பு

19 அக்டோபர் 2026, 12:48 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தந்தை தடியால் தாக்கியதில், சுய நினைவிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகன் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், வாணியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் -தேன்மொழி தம்பதியின் மூத்த மகன் குணால் (18). இவா், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வேலைக்கும் போகாமல் மது அருந்திவிட்டு, ஊரில் வீண் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்த நிலையில், குணால் வெள்ளிக்கிழமை வீட்டில் படுத்திருந்தாா். அப்போது, அங்கு வந்த வெங்கடேசன், வேலைக்கு போகாமல் தூங்குகிறாயா? எனக் கேட்டு, மரத்தடியால் அவரைத் தாக்கினாராம்.

Advertisement

Advertisement

இதில், தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த குணால், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா், சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments