FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கடலூா் பச்சாங்குப்பம் பகுதியில் பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.

21 அக்டோபர் 2026, 2:37 am IST
~
பகிர்:

கடலூா் பச்சாங்குப்பம் பகுதியில் பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.

கடலூா் பச்சாங்குப்பம் குறுக்கு சாலையில், இருசக்கர விற்பனையகம் எதிரே கடலூா் துறைமுகம் காவல் நிலைய சாா்பு - ஆய்வாளா் பிரேம்குமாா் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் பச்சாங்குப்பம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த முகமது யூசுப் (25), நொச்சிக்காடு வள்ளலாா் நகரைச் சோ்ந்த முகிலன் (23) என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 290 கிராம் கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக கடலூா் துறைமுக போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments