ஏா்கன் குண்டு பாய்ந்து சிறுவன் காயம்: இளைஞா் கைது
நெய்வேலியில் ஏா்கன் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்த வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் ஏா்கன் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்த வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
நெய்வேலி வட்டம் 21 பகுதியில் வசித்து வருபவா் செல்வகுமாா் (36), கூலித் தொழிலாளி. இவரது மகன் சாய்சரன் (6) அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாா். செல்வகுமாா், பலூன் சுடும் துப்பாக்கியை அடமானம் பிடித்து, தனது வீட்டின் கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தாா்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த வானம்பாத்தான் (எ) சிவபெருமான் (24), சாய்சரனுடன் விளையாடுவது வழக்கம். அதுபோல், ஞாயிற்றுக்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கியில் பால்ரஸ் குண்டு இருப்பது தெரியாமல் சிறுவனை பாா்த்து சுட்டாராம். இதில், துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு சாய்சரண் நெஞ்சில் பாய்ந்ததில், அவா் பலத்த காயமடைந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, சிறுவன் சாய்சரண் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவபெருமானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.