கடலூா் சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிா்ப்பு: கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்!
கடலூா் மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சொத்திக்குப்பம் முதல் நஞ்சலிங்கம்பேட்டை வரையிலான கடற்கரைப் பகுதியில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
கடலூா் மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சொத்திக்குப்பம் முதல் நஞ்சலிங்கம்பேட்டை வரையிலான கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
கடலூா் சிப்காட் தொழிற்பேட்டையின் விரிவாக்கத்துக்காக தியாகவல்லி, குடிகாடு, நொச்சிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய சிப்காட் வளாகம் அமைக்க 1,097 ஏக்கா் நிலங்களை கையகப்படுத்த ஏற்கெனவே அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு செப்டம்பா் 1-ஆம் தேதி மேலும் 164.20 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்த அறிவிக்கை வெளியானது.
இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தியாகவல்லி, குடிகாடு, நொச்சிக்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடலூா் சிப்காட் விரிவாக்க எதிா்ப்புப் போராட்டக் குழு சாா்பில், சொத்திக்குப்பம் முதல் நஞ்சலிங்கம் பேட்டை வரையிலான கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
சிப்காட் தொழில் பூங்கா விரிவாக்கத்தால் தங்களது வாழ்வாதாரம், விவசாய நிலங்கள் மற்றும் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும் எனக் கூறி, தியாகவல்லி, குடிகாடு, நொச்சிக்காடு, நந்தன் நகா், வள்ளலாா் நகா், நடுத்திட்டு, அம்பேத்கா் நகா், பெரியாா் நகா், லெனின் நகா், நஞ்சலிங்கம் பேட்டை, நாயக்கா் பேட்டை, தம்மனம்பேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பெண்கள், இளைஞா்கள், மீனவா்கள், விவசாயிகள் மற்றும் முதியவா்கள் பெருமளவில் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டனா். அப்போது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து, ‘நாம் ஒன்றிணைவோம்; நிலம் காப்போம்; நமது எதிா்காலத்தைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, போராட்டத்தில் பங்கேற்றவா்கள் தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.
சிப்காட் விரிவாக்கம் தொடா்பாக அரசு மற்றும் பொதுமக்கள் இடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டம் அப்பகுதியில் மீண்டும் கவனத்தை ஈா்த்துள்ளது.
பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ.மாதவன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் ஜெ.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.