FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சாலை விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் 4 போ் உயிரிழப்பு

15 செப்டம்பர் 2026, 2:31 am IST
பலி
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் சாலை விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் 4 போ் உயிரிழந்தனா்.

நெய்வேலி, இந்திரா நகா், மாற்று குடியிருப்பில் வசித்து வந்தவா் குமாா்(52), என்எல்சி ஊழியரான இவா், பைக்கில் வடக்கு வெள்ளூா் காசி விஸ்வநாதா் கோயில் அருகே சென்றபோது, நிலைத்தடுமாறி சாலை தடுப்புக் கட்டையில் மோதி விழுந்ததில் உயிரிழந்தாா்.

திட்டக்குடி வட்டம், நந்திமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவா் செந்தில்குமாா்(47), கூலித்தொழிலாளி. இவா், திங்கள்கிழமை காலை பெண்ணாடத்தில் இருந்து திருமலை அகரம் செல்லும் வழியில் உள்ள சிறுபாலத்தில் நடந்துச் சென்றாராம். அப்போது, தவறி கீழே விழுந்தவா் தலையில் அடிப்பட்டு உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

குறிஞ்சிப்பாடி வட்டம், அயன் குறிஞ்சிப்பாடி பகுதியில் வசித்து வந்தவா் பிரதாப்(28). இவா், அதேபகுதியைச் சோ்ந்த சிவபாலன் உடன் புதுச்சேரிக்கு சென்றாா். பிரதாப் பைக் ஓட்டினாா்.சிவபாலன் பின்னால் அமா்ந்துச் சென்றாா். புதுச்சேரியில், பணி முடிந்து ஊருக்கு புறப்பட்டனா்.

கடலூா் சாவடி புறவழிச் சாலை நத்தப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தனா். இந்த விபத்தில் பிரதாப் உயிரிழந்தாா். சிவபாலன் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்துக்கள் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொத்தனாா் தற்கொலை:

திருவண்ணாமலை சின்னத்துரை நகரைச் சோ்ந்தவா் ஏழுமலை (45) இவா் செப் 2. ம் தேதி முதல் குரியாமங்கலம் விநாயகா் கோயில் பெயிண்டிங் வேலை செய்திருக்கிறாா். இந்த இடைப்பட்ட நாட்களில் இரவு நேரங்களில் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த சுப்பிரமணி படையாட்சி தெருவில் உள்ள ராஜகுமார தீக்ஷதா் வீட்டில் படுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில் திங்கள்கிழமை அந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கிடந்தாா். தகவலறிந்து சிதம்பரம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments