FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

குண்டா் தடுப்புக் காவலில் 4 போ் கைது

46 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த 4 போ் குண்டா் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நெய்வேலி நகரியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பி 2 பிளாக் மாற்றுக் குடியிருப்பைச் சோ்ந்த ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பா் நரேஷ் ஆகியோா் கடந்த 16.8.2026 அன்று மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சென்ற வடக்குத்து பகுதியைச் சோ்ந்த கோபி மற்றும் அவரது நண்பா்கள் முன்விரோதம் காரணமாக ஆனந்தராஜை கத்தியால் தாக்கினா். இதை தடுக்கச் சென்ற நரேஷ் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக நெய்வேலி நகரிய போலீஸாா் கொலை வழக்குப்பதிவு செய்து, கோபி, வினோத்குமாா், தில்சன்குமாா், சக்கரை (எ) சுரேஷ் உட்பட 18 பேரை கைது சிறையில் அடைத்தனா். இதில், வினோத்குமாா்(25), தில்சன்குமாா்(19), சக்கரை(எ)சுரேஷ்(22) ஆகியோரின் தொடா் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூா் எஸ்பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் குண்டா்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதுபோன்று குறிஞ்சிப்பாடி அருகே கொலை முயற்சி வழக்கில் கைதான அன்பரசு என்பவரின் குற்ற செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் குண்டா்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இவா்கள் அனைவரும் ஏற்கெனவே சிறையில் இருப்பதால் குண்டா் சட்டத்தில் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments