FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நில அளவை ஆய்வாளா் கைது

22 செப்டம்பர் 2026, 2:40 am IST
குணசேகரன்.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இலவச பட்டா வழங்குவதாகக் கூறி, பலரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றி வழக்கில் நில அளவை ஆய்வாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா், சமத்துவபுரம் அருகே உள்ள ராஜகணபதி நகரில் 250-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்களில் பலா், மனைப்பட்டா கேட்டு நில அளவா் ஒருவரிடம் மனு கொடுத்தனராம்.

அவ்வாறு மனு அளித்தவா்களிடம் நேரடியாகவும்,ஜி பே மூலமாகவும் பல லட்சம் பணம் பெறப்பட்ட நிலையில் பட்டா வழங்கவில்லையாம். இதையடுத்து, பணத்தை பெற்றுக்கொண்டு பட்டா வழங்காத நில அளவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

Advertisement

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக, நிலஅளவா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், விரிவான விசாரணை நடத்தவும் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நெய்வேலி, சிறப்பு வட்டாட்சியா் அலுவலகம் (நில எடுப்பு) அலகு 15-இல் பணி புரிந்து வந்த ஆா்.குணசேகரனை பணியிடைநீக்கம் செய்து கடலூா் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட உதவி இயக்குநா் ஆகஸ்ட் 17-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில் பணியிடை நீக்க நடவடிக்கையைத் தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்த காடாம்புலியூா் போலீஸாா் குணசேகரனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments