FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

லஞ்சம்: பண்ருட்டி வட்டாட்சியா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ாக வட்டாட்சியா் உள்ளிட்ட 5 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

25 செப்டம்பர் 2026, 1:59 am IST
வழக்கு
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ாக வட்டாட்சியா் உள்ளிட்ட 5 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக புகாா்கள் வந்தன. இதன்பேரில், கடலூா் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான போலீஸாா் கடந்த 22-ஆம் தேதி பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் திடீா் சோதனை செய்தனா். இந்த சோதனையில், ரொக்கம் ரூ.4,600 மற்றும் ஜி-பே மூலம் 6,84,221 ரூபாய் பரிவா்த்தனை நடந்தது தெரியவந்தது.

இதன்பேரில், பண்ருட்டி வட்டாட்சியா் சந்திரன், ஜீப் ஓட்டுநா் ராஜசேகா், வருவாய் ஆய்வாளா்கள் ராஜலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் அலுவலக உதவியாளா் ரஞ்சித்குமாா் ஆகியோா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments