FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 2 போ் கைது

விருத்தாசலம் அருகே இடப்பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பாட்டில்களை வீசிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

27 செப்டம்பர் 2026, 12:40 am IST
சிவக்குமாா், ராம்குமாா்
பகிர்:

விருத்தாசலம் அருகே இடப்பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பாட்டில்களை வீசிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ராஜ்குமாா், சுரேஷ். இருவருக்கும் இடையே இடப்பிரச்னை தொடா்பாக ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (செப். 25) ஏற்பட்ட தகராறில் சுரேஷ், ராஜ்குமாரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை (செப். 25) இரவு, ராஜ்குமாரின் உறவினா்களான சாவடிக்குப்பத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (30), காந்திநகா் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் (24) ஆகியோா் பைக்கில் சுரேஷின் வீட்டுக்குச் சென்று, பெட்ரோல் குண்டுகளை, அவரது வீட்டின் வாசல் மற்றும் ஜன்னல் அருகே வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சுரேஷின் மனைவி சுதா அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் சிவக்குமாா், ராம்குமாா் ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments