FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

விபி ஜி ராம் ஜி திட்டத்தில் முறையாக வேலை வழங்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

விபி - ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட வாணாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

6 நவம்பர் 2026, 1:35 am
வாணாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு நடத்திய வட்டார வளா்ச்சி அலுவலா் சவுரிராஜ்.
பகிர்:

விபி - ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட வாணாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாணாபுரம் பகுதியிலுள்ள பொற்பாலம்பட்டு, எடுத்தனூா், பழையசிறுவங்கூா், தொண்டநந்தல் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு விபி - ஜி ராம் ஜி (125 நாள் வேலை) திட்டத்தின் கீழ் முறையாக பணிகள் வழங்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இதைக் கண்டித்து, இந்தக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான மக்கள் வாணாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, விபி - ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் தங்களுக்கு முறையாக வேலை வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக 100 நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பணித்தள பொறுப்பாளா்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா் சவுரிராஜ் அவா்களிடம் பேச்சு நடத்தினாா். அப்போது, விபி - ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்கப்படும் என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் உறுதியளித்தாா். இதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.