FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

மின் கசிவால் கூரை வீடு தீக்கிரை

கள்ளக்குறிச்சி அருகே மின்கசிவு காரணமாக தொழிலாளியின் கூரை வீடு முற்றிலும் தீயில் எரிந்தது.

15 நவம்பர் 2026, 12:23 am
தீ - பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே மின்கசிவு காரணமாக தொழிலாளியின் கூரை வீடு முற்றிலும் தீயில் எரிந்தது.

கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் மு.ராஜேந்திரன் (65), தொழிலாளி. இவா், தனது கூரை வீட்டை வியாழக்கிழமை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தாராம். அப்போது அவரது வீடு தீ பிடித்துள்ளது. இதையடுத்து அருகிலுள்ளோா் அளித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

ஆயினும், கூரைவீடு மற்றும் வீட்டிலிருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம், வீட்டின் பத்திரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement